விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல்துறை
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழம் முழுவதும் காவல்துறையில் பணிக்காலத்தில் காலமான காவல் ஆளிநர்களின் வாரிசுதாரர்கள் 912 பேருக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர் மற்றும் காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடங்களுக்கு பணி நியமன ஆணை கடந்த 30.8.2022 அன்று வழங்கப்பட்டிருந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்திற்கு 49 பணியாளர்கள் வந்து அறிக்கை செய்து கொண்டனர். இவர்களுக்கு தகவல் பதிவு உதவியாளர் மற்றும் காவல் நிலைய வரவேற்பாளர் பணிகளுக்கான பயிற்சி வகுப்புகள் இன்று முதல் விழுப்புரம் காக்குப்பம் ஆயுதப்படை வளாகத்தில் கணினி பயிற்சி வரவேற்பாளர் தட்டச்சு பயிற்சிகள் மூன்று மாதத்திற்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நமது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீநாதா IPS., அவர்கள் பயிற்சியை துவங்கிவைத்தார்.