சேலம் : மேட்டூர் உட்கோட்டம், கொளத்தூர் காவல் நிலைய சரகம், பாலமலை, கடுக்காமரத்துக்காட்டில் வசித்து வரும் தனபால் என்பவரது தோட்டத்தில் கஞ்சா பயிரிட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் இன்று (10.01.2023) ஆம் தேதி மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு M. விஜயகுமார் Mcom.,BL அவர்கள் தலைமையில் கொளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. அன்பழகன், த.கா.1580 செட்டி, கா.1666 மாதேஷ்குமார், மற்றும் தனிப்பிரிவு தலைமை காவலர் சத்தியமூர்த்தி, ஆகியோருடன் அங்கு சென்று பார்த்தபோது மேற்படி நபரின் தோட்டத்தில் சுமார் 500 கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்தது. அவைகளை அழித்தும், குற்றவாளி தனபால் (28), த.பெ. பெருமாள் என்பவரை கைது செய்து நிலையம் கொண்டு வந்தும் கொளத்தூர் காவல் நிலைய குற்ற எண் 10/2023 u/s 8(b), 20 (a) (i) of NDPS Act 1985 ஆக வழக்கு பதிவு செய்து குற்றவாளி தனபால் என்பவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்