தேனி : தேனி நகர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட அரண்மனைப்புதூர் விளக்கு பகுதியில் கேட்பாரற்றுக் கிடந்த ₹ 45,000/- இருந்த பணப்பையை கொடுவிலார்பட்டி அருகே உள்ள கோபாலபுரத்தை சேர்ந்த குருதேவன் (45) என்பவர் பணப்பையை எடுத்து தேனி நகர் காவல்நிலையத்தில் ஒப்படைத்த நிலையில் பணப்பையில் இருந்த ஆதார் அட்டையின் முகவரியை தொடர்பு கொண்டபோது அது சீலையம்பட்டியைச் சேர்ந்த பிச்சைமணி (50) என்பவருக்கு சொந்தமான பணம் என்பது தெரியவந்தையடுத்து காவல் ஆய்வாளர் திரு. முருகானந்தம் அவர்கள் முன்னிலையில் பணத்தை பிச்சைமணியிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் கீழே கிடந்த பணத்தை எடுத்து உரியவரிடம் ஒப்படைக்க உதவியாக இருந்த குருதேவனை காவல் ஆய்வாளர் வெகுவாக பாராட்டினார்.















