மதுரை : மதுரை கூடல் நகர் அசோக் நகர் மூன்றாவது தெருவில் சந்தேகப்படும் படியாக கும்பல் ஒன்று பதுங்கியிருப்பதாக கூடல்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுமுத்துவிற்கு தகவல் கிடைத்தது., அவர் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்று சுற்றி வளைத்து அங்கிருந்த ஆனையூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த மோகன் குமார் மகன் சூரியபிரகாஷ் 20, அதே பகுதியைச் சேர்ந்த ராஜபாண்டி மகன் அருண் பாண்டி என்ற கௌதம் 21 ,விளாங்குடி கரிசல் குளத்தை சேர்ந்த காசிராஜன் மகன் பாரதி 20 அதே பகுதியைச் சேர்ந்த அய்யங்காளை மகன் தர்மராஜ் 25 ஆகிய 4 பேரையும் ஆயுதங்களுடன் கைது செய்தனர் .
மற்றொருவரான ,கரிசல் குளத்தைச் சேர்ந்த வேட்டையன் என்ற ஐயங்காளை அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் .
அவரை தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி