திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அருகே போலாச்சி அம்மன் குளம் கிராமத்தில் பனை திருவிழா மற்றும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பனைமர பொருட்களை பயன்படுத்தி கைவினைப் பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அருப்புக்கோட்டை மாரியம்மாள் பனை மரத்தில் பெண்களாலும் ஏறி பனைத் தொழில் செய்ய முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக மரம் ஏறும் இயந்திரத்தை பயன்படுத்தி பனைமரம் ஏறினார். பின்னர் எவ்வாறு பனை மர பொருட்களை வைத்து சிறு தொழில் செய்யலாம் என்பதற்கு விளக்கம் அளித்து அருகாமையில் இருந்த பனை மரத்தில் ஏறி அங்கிருந்த நுங்கு மற்றும் பதநீரை இறக்கி பின்பு அதனை கூடியிருந்த பொது மக்களுக்கு வழங்கினர். மேலும் பனைமரம் ஏறும் இயந்திரத்தை பயன்படுத்தி பனைமரத்தில் எவ்வாறு ஏறுவது என்பது குறித்து மாரியம்மாள் ஆண்களுக்கும் விளக்கம் அளித்து பயிற்சி அளித்தார். ஆர்.டி. பவுண்டேஷன் மற்றும் காளீஸ்வரன் பவுண்டேஷன் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் அதன் இயக்குனர் பெனிடிக் சேவியர், ஒருங்கிணைப்பாளர் திருமலை நகர் சுமன் ஆகியோர் முக்கிய பங்காற்றினர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு