தூத்துக்குடி: சிவஞானபுரம் பகுதியில் 10,000 பனைமர விதைகள் நடும் விழா இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் துவக்கி வைத்தார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், பனை மரம் வளர்ப்பது பல வகைகளில் மிகவும் பயனள்ளதாக இருக்கும். பனைமரம் அதன் நுனியிலிருந்து வேர் வரை பல வகைகளில் நமக்கு பயன்தரகூடியதாகும்.
பனை மரங்களை மணற்பாங்கான மற்றும் சரிவான பகுதிகளில் வளர்ப்பதன் மூலம் மணல் அரிப்பு ஏற்படுவதை தடுக்கமுடியும். ஏனென்றால் ஆணி வேரை விட பக்கவாட்டில் செல்லக்கூடிய சல்லி வேர்கள் அதிகம். இதனால் மண்வளம் மற்றும் நீர்வளம் அதிகரிக்கும். விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் மிகவும் பயன்களை தரக்கூடியது.
பனைமர விதைகள் விதைப்பதன் மூலம் வரும் தலைமுறைகளுக்கும் மிகவும் பயன்தரக்கூடியதாகும். ஆகவே அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார்.