சென்னை :சென்னை: பத்மா சேஷாத்ரி பள்ளியை தொடர்ந்து சென்னையில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்த் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது.. மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து காமர்ஸ் பாட ஆசிரியரான ஆனந்த்தை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஒரு வாரமாகவே பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் தலைதூக்கி வருகிறது.. இங்கு பணியாற்றியி ராஜகோபாலன் என்ற ஆசிரியர், பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை டிரஸ்ஸுடன் வருவதாகவும் எழுந்த புகாரை அடுத்து அவர் கைதாகி உள்ளார்.. 14 நாட்களுக்கு புழல் ஜெயிலிலும் அடைக்குமாறு சென்னை எழும்பூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மகிரிஷி வித்யா மந்திரின், சிபிஎஸ்இ பள்ளியில் பணியாற்றிய ஆனந்த், அதே பள்ளியின் மெட்ரிக் பள்ளியில் பணியாற்றி வருகிறார். இவர் மீது முன்னாள் மாணவி ஒருவர், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
உரையாடல்
இந்த புகாரைப் பற்றிய தகவலை இன்னொரு மாணவி, ‘ஆனந்துக்கு அனுப்பி இது நீங்கள் தானா? என்று வாட்ஸ்-அப்பில் கேட்டுள்ளார். ஆனால்,இதற்கு மறுப்பு தெரிவித்த அவர், ‘இந்த செய்தியை நீங்க நம்பறீங்களா? உங்கள் எல்லாருக்குமே என்னை பற்றி தெரியும்.. அதிலும் குறிப்பாக என்னிட்ட காமர்ஸ் படிக்கும் படிக்கும் மாணவர்களுக்கு என்னை பற்றி நல்லாவே தெரியும்.
மாணவி
மை டியர் மகளே, என் வேலையை நான் எவ்வளவு அர்பணிப்புடன் செய்கிறேன் என்று கடவுளுக்கு தெரியும்.. நான் அப்படிப்பட்ட ஆளும் இல்லை.. ஏன்னா, நான் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆக இருப்பேன்.. என் மாணவிகளை எப்போதும் பாதுகாப்பதே நான்தான்.. இந்த காரியத்தை யார் செய்தாங்கன்னு எனக்கு தெரியாது. ஆனால், கண்டிப்பாக என்கிட்ட படிச்ச பிள்ளைகளாக இருக்க மாட்டாங்க’ என்றார்.
தவறு
அதற்கு அந்த மாணவி, ‘மாணவர்கள் மீது அக்கறை என்ற பெயரில். இந்த தப்பை செய்தே நீங்கதான்.. அதை உங்க கிட்ட படிச்ச எல்லா மாணவர்களும் ஒப்புக்கொண்டு விட்டார்கள்.. இதக்கு நீங்க என்ன பதில் சொல்ல போறீங்க? இப்படி ஒரு கேவலமான காரியத்தை நீங்கதான் செய்தீங்கன்னு ஒத்துக்கொள்கிறீர்களா?’ என்று கேட்கிறார்.. இப்படி, மாணவி – ஆனந்த் ஆசிரியரின் வாட்ஸ்அப் உரையாடலும் இணையத்தில் வைரலானது.
ஆசிரியர்
11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான வணிகவியல் பாட ஆசிரியர் ஆனந்தன் மீது இப்படி ஏராளமான பாலியல் புகார்கள் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் வெளியாகிய வண்ணம் இருந்தன.. அதுமட்டுமில்லாமல், முன்னாள் மாணவர்கள் பலரும் சேர்ந்து, குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையம், மகளிர் ஆணையம், உயர்கல்வித்துறை செயலாளர், பள்ளி நிர்வாகம் ஆகியோருக்கு ஆனந்த் பற்றி புகார் கடிதமும் எழுதியுள்ளனர்.
நிர்வாகம்
இதை தொடர்ந்து இந்த விவகாரத்தில் தலையிட்ட பள்ளி நிர்வாகம், மாணவிகள் அளித்த புகார்களின் அடிப்படையில், காமர்ஸ் டீச்சர் ஆனந்தனை பணியிடை நீக்கம் செய்துள்ளது… மேலும் புகார் தொடர்பாக நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் விசாரணை நடக்கும் வகையில் குழு அமைக்கப்படும் எனவும் பள்ளி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
சென்னை அயனாவரம் மகரிஷி வித்யா மந்திர் ஆசிரியர் ஆனந்த் மீதான பாலியல் புகாரில் விசாரணையை துவக்கி உள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.