சிவகங்கை : காரைக்குடி வடக்கு காவல் நிலைய சரகம், காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே கடந்த மாதம் (18.6.2023) ம் தேதி நடந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான ஆதிநாராயணன், தனுஷ் (எ)தனசேகரன், மருதுவிக்கி(எ)விக்னேஸ்வரன், சேது( எ)சேதுபதி. சரவணன்(எ)சரவணக்குமார். தினேஷ் (எ)தினேஷ்குமார். செல்வா(எ)செல்வகுமார், ஸ்ரீதர், நவீன்(எ)நவீன்குமார் அஜித்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களை, குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் அடைக்க தென் மண்டல காவல்துறை தலைவர் திரு.அஸ்ரா கார்க், இ.கா.ப., அவர்கள், இராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் திரு.துரை, இ.கா.ப, ஆகியோர்களின் வழிகாட்டுதலின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் உதவி காவல் கண்காணிப்பாளர் Dr.ஸ்டாலின் IPS., மற்றும் காரைக்குடி வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.ரவீந்திரன் ஆகியோர் பரிந்துரையினை ஏற்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி.ஆஷா அஜித் I.A.S., அவர்கள், (21.07.2023)ம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி