சேலம் : சேலம் மாவட்டம், தலைவாசல் காவல் நிலையம் (19 /09/ 2022),-ம் தேதி மாலையில் பத்திரிகை செய்தியாளர் திரு.தாமோதரன்பிரகாஷ் (56), சென்னை மற்றும் அவருடன் புகைப்பட கலைஞர் அஜித்குமார் (24), ஆகியோர் காவல் நிலையம் ஆஜராகி இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், சக்தி பள்ளியில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை படம் எடுத்துக் கொண்டு கிளம்பிய போது பள்ளி தாளாளர் ரவிக்குமாரின் சகோதரர் அருள் சுபாஷ் கவுன்சிலர் ராஜசேகரின் உறவினர்கள், மோகனின் அடியாட்கள் என பத்து பேர் தங்களை வழிமறித்து தாங்கள் வந்த கார் கண்ணாடியை உடைத்தும் தங்களை தாக்கவும் செய்ததால் காரில் வேகமாக ஆத்தூர் நோக்கி வந்த போது ஆறு இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் வழியில் இரண்டு இடங்களில், தங்களை வழி மறைத்து தாக்கம் உட்பட்டதாகவும் தலைவாசல் அருகே வந்தபோது காரில் இருந்து புகைப்பட கலைஞர் அஜித்தை இறக்கி தாக்கியதில் அவருடைய பல் உடைந்ததாகவும், கூறினார்கள்.
மருத்துவ நமூனா மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ் கொடுத்த எழுத்து மூலமாக புகாரின் அடிப்படையில் தலைவாசல் காவல் நிலைய கூற்று எண் 329 2022 கொலை முயற்சி பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட ஒன்பது சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மனுதாரர் கொடுத்த இரண்டு வீடியோ பதிவுகளின் அடிப்படையில் மனுதாரரை துரத்தி வந்த ஐந்து குற்றவாளிகள் செல்வராஜ் 44 அகரம் மஞ்சள் சின்னசேலம் தீபன் சக்கரவர்த்தி 36 சின்னசேலம் செல்வகுமார் 38 சின்ன சேலம் பாலகிருஷ்ணன் 45 சின்னசேலம் ராஜசேகர் 44 கனியாமூர் சின்னசேலம் ஆகியோரை கைது செய்தும் அவர்கள் பயன்படுத்திய நான்கு இரு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது கைது செய்யப்பட்ட ஐந்து குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளனர் சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்