சென்னை : சென்னை கொடுங்கையூரை சேர்ந்த ஆரோக்கியசாமி, வ/45,என்பவர் டாஸ்மாக் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் ஒரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார் இந்நிலையில் இன்று (03.12.2020) அதிகாலை ஆரோக்கியசாமி அடையாளம் தெரியாத 2 நபர்கள் குடிபோதையில் நாங்கள் பத்திரிகையாளர்கள் என கூறி வீட்டிற்குள் சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அதில் ஆரோக்கியசாமி பயந்து தன்னிடம் இருந்த பணம் ரூ.20,000/- கொடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து ஆரோக்கியசாமி, P-6 கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில் வழக்கு பதிவு செய்து காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி பணம் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த 1) அருண்குமார், வ/33, கொடுங்கையூர், 2) ஷாம், வ/32, கொய்யாதோப்பு, ஆகிய 2 குற்றவாளிகளை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆரோக்கியசாமி பறிகொடுத்த பணம் ரூ.20,000/- மீட்கப்பட்டது. இவர்கள் மீது நீதி மன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
