இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சார்பதிவாளர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.உன்னிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் திடீரென அதிரடி சோதனை நடத்தியதில், கணக்கில் வராத ரொக்கப்பணம் ரூ.13595/- பறிமுதல் செய்து, சார்பதிவாளர் மாலதி, உதவியாளர் ராஜேஷ்கண்ணன், இடைத்தரகர் வெங்கடேசன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சுமார் 2 மணி நேரமாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி