கோவை : கோவையில் கஞ்சாவை பதுக்கி வைத்து மாணவர்கள் இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்தரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து சிறையில் அடைத்தனர். கோவை பூசாரிபாளையம் பகுதியில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக செல்வபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள கோவில் அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட செட்டி வீதியைச் சேர்ந்த கார்த்திகேயன் ( 28), என்பவரை கைது செய்து நேற்று அவரை சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்