திண்டுக்கல் : திண்டுக்கல் தாலுகா அலுவலக சாலையில், உள்ள ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த குடோனில் உணவகங்களில் சாம்பார் பார்சல் கட்டிக்கொடுக்க பயன்படுத்தப்படும் பாலித்தீன் பைகள் உள்பட மொத்தம் 600 கிலோ பாலித்தீன் பைகள் இருந்தன. இதையடுத்து 600 கிலோ பாலித்தீன் பைகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் குடோன் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா