தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ், அவர்கள் மேற்பார்வையில் கயத்தார் காவல் நிலைய ஆய்வாளர் முத்து தலைமையில் கோவில்பட்டி உட்கோட்ட தனிப்படை காவல் துறையினர் (02.08.2022) கயத்தார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோரம்பள்ளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, செட்டிகுறிச்சி ராமதாஸ் நகர் காலனி பகுதியை சேர்ந்த சண்முகையா மகன் முருகன் (32), மற்றும் செட்டிக்குறிச்சி ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் காளிராஜ் (33), ஆகிய 2 பேரும் மேற்படி முருகனின் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. உடனே மேற்படி காவல் துறையினர், குற்றவாளிகளான முருகன் மற்றும் காளிராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூபாய் 41,760/- மதிப்புள்ள 85 கிலோ புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கயத்தார் காவல் நிலைய காவல் துறையினர், வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.