கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. பகலவன், IPS அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக கள்ளச்சாரயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள தனிப்படை அனைத்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் (21.12.2022), தேதி சங்கராபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.நரசிம்மஜோதி அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் தனிபிரிவு முதல்நிலை காவலர் 792 கிருஷ்ணன் மற்றும் தனிப்படை காவலர்கள் பாவளம் கிராமத்தில் சோதனை செய்தபோது கரும்பு காட்டில் விற்பனைக்காக சாராயத்தை பதுக்கி வைத்துருந்த துரை மணிகண்டன்(30) த/பெ பொன்னுசாமி, சேராப்பட்டு என்பவரை கைது செய்து, அவர் பதுக்கி வைத்துருந்த தலா 60 லிட்டர் பிடிக்கக்கூடிய 6 லாரி டியூபில் சுமார் 360 லிட்டர் சாராயமும், 4 சாக்குபையில் பாக்கெட்டுகளாக சுமார் 100 லிட்டர் சாராயமும் என பொத்தம் 460 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து, குற்றவாளி நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.