கோவை : சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (06.02.2023) சோமனூர் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கோவை மாவட்ட தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான கருமத்தம்பட்டி சோமனூர் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த மகேந்திர சகானி என்பவரது மகன் மகேஷ் குமார் (32), என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.54,000/- மதிப்புள்ள 2.750 கிலோ கஞ்சா மற்றும் ரூ.2,00,000/- மதிப்புள்ள 22.500 எடை கொண்ட 4000 கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து, மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்