தமிழக காவல்துறையின் முதுகெலும்பாக திகழ்வது நேரடி உதவி ஆய்வாளர்கள் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களுக்கு உடனடியாக அணுகும் இடமாக காவல் நிலையங்கள் திகழ்கின்றனர். அக்காவல் நிலையங்களில் முக்கியமான பதவி உதவி ஆய்வாளர் பதவியாகும். சட்டம் ஒழுங்கை சீரிய முறையில் நிலைநாட்ட அப்பதவிக்கு நேரடி உதவி ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இளையவர்களால் விரைவாகவும் வேகமாகவும் செயல்பட முடியும் என்ற காரணத்தால் நேரடி உதவி ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் ஆனால் அவர்களுக்கு உரிய நேரத்தில் பதவி உயர்வு கிடைக்காமல் அவர்களின் வேகத்தையும் உந்துதலையும் குறைத்து வருகிறது. காவல்துறையில் நேரடி ஐ.பி.எஸ், அதிகாரியாக நியமிக்கப்படுகிறவர்கள் 2 ஆண்டுகளில் எஸ்.பி ஆக பதவி உயர்வு பெற்றுவிடுகிறார்கள் தமிழக அரசால் தேர்வு செய்யப்படும் நேரடி டி.எஸ்.பி-க்கள் 5 ஆண்டுகளில் பதவி உயர்வு பெற்றுவிடுகிறார்கள். இரண்டாம் நிலை காவலர்களாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கூட 10 ஆண்டுகளில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால் நேரடி உதவி ஆய்வாளர்களாக தேர்வு செய்யப்படுபவர்களை யாரும் கண்டு கொள்வதில்லை
2011ஆம் ஆண்டு நேரடி உதவி ஆய்வாளர்களாக தேர்வு செய்யப்பட்ட சுமார் 900 உதவி ஆய்வாளர்கள் 12 ஆண்டுகள் பணி முடித்தும் இதுநாள் வரை ஒரு பதவி உயர்வு கூட வழங்கப்படாமல் பரிதவித்து வருகிறார்கள் தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்கள் இன்னமும் உதவி ஆய்வாளர்கள் பதவி நிலையில் இருந்து வருகிறது. அக்காவல் நிலையங்களை ஆய்வாளர் பதவி நிலைக்கு உயர்த்தினால் பொதுமக்களின் குறைகள் விரைவில் தீர்வுகாண ஏதுவாக இருக்கும் நேரடி உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து 10 ஆண்டுகள் பணி அனுபவம் பொதுமக்களின் குறைகளை விரைந்து தீர்வு காண ஏதுவாக இருக்கும். மேலும் பல காவல் நிலையங்களில் குற்றபிரிவு காவல் ஆய்வாளர் பதவி ஏற்படுத்தப்படாமல் உள்ளன அவற்றிலும் பதவிகளை ஏற்படுத்தினால் குற்றங்களை கட்டுப்படுத்தவும் நடந்த குற்றங்களை விரைந்து கண்டுபிடிக்கவும் ஏதுவாக இருக்கும் தமிழக அரசு நேரடி உதவி ஆய்வாளர்களின் பரிதவிப்பை போக்குவதன் மூலம் பொதுமக்களுக்கு விரைவாக நீதிகிடைக்கும் வழியையும் ஏற்படுத்தி கொடுக்கும். ஆனால் சார்பு ஆய்வாளர் என்ற பதவிக்கு மட்டும் என்ன சாபக்கேடோ தெரியவில்லை. பத்தாண்டுகளில் பதவி உயர்வு என்பது குதிரைக்கொம்பாகத்தான் இருந்து வருகிறது. பணியிடங்கள் இல்லாமல் இருந்து காலதாமதம் என்றால் கூட அதில் ஒரு நியாயம் உண்டு. ஏற்கனவே காலியாக இருக்கிற மற்றும் புதிய ஆய்வாளர் பணியிடங்கள் நிறைய ஏற்படுத்தப்பட்டும் இந்த காலவிரயம் என்பது சார்பு ஆய்வாளர்கள் மத்தியில் ஒரு பணிச்சோம்பலை ஏற்படுத்திவிடும் என்பதில் ஐயமில்லை. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு Delayed justice is denied justice.
இரண்டாம் நிலை காவலர்களாக தேர்வு செய்யப்படுகிறவர்களுக்கும் 10 ஆண்டுகளில் பதவி உயர்வு என்ற உத்தரவாதம் இதுநாள் வரை பின்பற்றப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டி அமைதி பூங்காவாக தமிழகத்தை திகழ வைத்துக் கொண்டிருக்கும் தமிழக காவல்துறையினர் சவாலான இக்கால கட்டத்தில் கூடுதல் உற்சாகத்தோடும் உத்வேகத்தோடும் பணியாற்ற வேண்டியது அவசியம் ஆகிறது ஆகவே காவல்துறையின் ஆணிவேராக விளங்கும் உதவி ஆய்வாளர்கள் உற்சாகம் கொள்ளத்தக்க வகையில் அவர்களின் மனச்சோர்வினை போக்கும் விதமாக பதவி உயர்வு குறித்து சட்டசபை கூட்டத் தொடரில் முதல்வர் அவர்கள் அறிவிப்புகள் வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு தமிழக காவல்துறையினர் இடையே நிலவி வருகிறது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்