நீலகிரி : நீலகிரி மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றி வரும் ஆய்வாளர் திருமதி. ஏ.பொன்னம்மாள் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். புலன் விசாரணை வழக்கில் சிறப்பான முறையில் புலன் விசாரணை செய்து எதிரிக்கு தண்டனை பெற்று தந்ததன் காரணமாக இவரது புலன்விசாரணை திறமையைப் பாராட்டி அவருக்கு மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்பு புலனாய்விற்கான பதக்கம் வழங்கி கௌரவிக்கப் பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.V. சசிமோகன் அவர்கள் ஆய்வாளரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.