திருச்சி : திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட, மனித உடலுக்கும் உயிருக்கும் கேடு விளைவிக்கும், இளைஞர்களின் வாழ்வை சீரழிக்ககூடிய போதை பொருட்களை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியானது (04.12.22) ந்தேதி காலை 06.00 மணிக்கு ஜோசப் கல்லூரியில் இருந்து ஏர்போர்ட் வழியாக மொரைஸ் சிட்டியில் வரை 10km மராத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சுமார் 1200 மாணவ மாணவியர் மற்றும் 600 பொதுமக்கள், காவலர்கள் உட்பட மொத்தம் 1800 பேர் கலந்து கொண்டார்கள். போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு 6 பிரிவுகளாக ரூ.3லட்சம் பரிசு தொகையை திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் மற்றும் மொரைஸ் சிட்டியின் நிறுவனர் திரு.லெய்ரோனி மொரைஸ் ஆகியோர் வழங்கினார்கள். மேலும் மாரத்தான் ஒட்ட பந்தயத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி தனது பாராட்டுகளை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் தெரிவித்தார்கள்.