நாமக்கல்: சென்னையில் கடந்த 23.08.2024 அன்று காவல் துறையில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழக முதல்வரின் அண்ணா காவல் பதக்கங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் நாமக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.தனராசு. சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் திரு. அருள்முருகன், திரு. செல்வகுமார். திரு. ரவி. திரு. ஹசன் மற்றும் ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டதற்க்காக தமிழக முதல்வரின் சிறப்பு பணிக்கான அண்ணா காவல் பதக்கங்கள் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று (27.08.2024) பதக்கங்களை பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.ராஜேஸ் கண்ணன். இ.கா.ப., அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.