கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், பு.மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராமானுஜம் 43. த/பெ மொட்டையன் என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மோகன்ராஜ்., அவர்களிடம் கொடுத்த புகார் மனுவில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி உளுந்தூர்பேட்டை சேர்ந்த இருவர் 12,50,000/- பணத்தை வாங்கி கொண்டு ஏமாற்றிவிட்டதாக கொடுத்த மனுவை உடனடியாக விசாரணை செய்ய உத்தரவிட்டார்.
இந்நிலையில் உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் திரு. தமிழவாணன் அவர்கள் விசாரணை செய்ததில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பாகுதியை சேர்ந்த 1) அஜந்தா 40. க/பெ அருண்குமார் சென்னை எழிலகத்தில் உள்ள மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருபவர் மற்றும் அவரது கணவர் 2) அருண்குமார் 42. த/பெ சண்முகம் சென்னை எழிலகத்தில் உள்ள வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருபவர்கள் மூலம் உளுந்தூர்பேட்டை வட்டம், மேற்கு கந்தசாமிபுரம் சேர்ந்த 3) இளந்தமிழன் 64. த/பெ பிச்சைக்காரன் மற்றும் அவர் மகன் 4) இமயவர்மன் 34. த/பெ இளந்தமிழன் ஆகிய நான்குபேரும் சேர்ந்து தமிழ்நாடுஅரசின் டாஸ்மார்க் கடை மற்றும் வருவாய்த் துறையில் வேலை வாங்கித் தருவதற்காக உளுந்தூர்பேட்டை பகுதியில் வசிக்கும் சுமார் 58 நபர்களிடமிருந்து சுமார் 1,14,50,000 ரூபாய் வாங்கிக் கொண்டு அரசு வேலை வாங்கித் தராமலும் மேலும் கொடுத்த பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றியுள்ளது தெரியவருகிறது மேற்படி மோசடியில் ஈடுபட்ட அஜந்தா, இளந்தமிழன், இமயவர்மன் ஆகிய மூன்று குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடிவருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.