தர்மபுரி: தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திரு. ச. சோ. மகேஸ்வரன்., B.COM, BL அவர்களின் உத்தரவின் பேரில் தர்மபுரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை. பெங்ளூரில் வசித்துவரும் தர்மபுரி மாவட்டம், வெங்கட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த சுபா என்பவர், தனது செல்போன் வாட்ஷ் அப் செயலிக்கு ஆன்லைன் ஜோதிடம் பார்ப்பதாக வந்த விளம்பரத்தின்படி, அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணை தொடர்புகொண்டு சொர்ணகுமார் (எ) விஷ்ணுராஜன் என்பவரிடம், தன்னுடைய கணவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக ஜாதகம் பார்த்து, தன்னுடைய கணவருக்கு ஏற்பட்ட நோய்க்கு பரிகாரம் செய்ய கேட்டதாகவும், அப்போது சுபாவின் கணவருக்கு செய்வினை வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை நீக்க வேண்டும் என்றும் சொர்ணகுமார் (எ) விஷ்ணுராஜன் ஆசை வார்த்தை கூறியதுடன், பரிகார பூஜையின்போது. உடனிருந்தால், உடனிருப்பவருக்கும் பக்கவாதம் வரும் என மிரட்டி, ரூ.8 லட்சம் பணத்தை ஆன்லைன் மூலம் முகம் தெரியாத நபர்கள் பறித்துவிட்டதாகவும், மேற்படி சுபா அளித்த புகாரின்பேரில், சைபர் குற்றத்தடுப்பு போலிசார் வழக்குபதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.சோ.மகேஸ்வரன் அவர்களின் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தலைமையிடம் அவர்களின் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து தேடிவந்ததில், சென்னையில் ஸ்ரீ அக்ஷய விநாயகர் ஜோதிட ஆராய்ச்சி நிலையம் என்ற பெயரில் ஜோதிடம் பார்த்துவந்த சொர்ணகுமார் (எ) விஷ்ணுராஜன் த/பெ பகவதி பெருமாள் மற்றும் அவரது மனைவி வெங்கடேஸ்வரி (எ) ஸ்ரீதேவி ஆகிய இருவரையும் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.