கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் நாரயணன் நகரில் ஷவுகத் அகமத் என்பவர் குடியிருந்து வருவதாகவும் 15.03.2024 ஆம் தேதி மதியம் சுமார் 12.00 மணிக்கு ஊத்தங்கரை SBI வங்கியில் டெபாசிட் செய்ய பணம் ₹25,000/- ரூபாய் மணி பர்சில் வைத்துக்கொண்டு வங்கிக்குச் சென்றபோது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அருகில் வந்து ஒருவன் இரண்டு 100 ரூபாய் நோட்டுகள் கீழே கிடப்பதாக கூறி அதை தான் பார்த்துக் கொண்டிருந்தபோது தன்னிடமிருந்த மணி பர்சை பிடுங்கிக் கொண்டு ஓடியாதகவும் மற்றொருவன் இருசக்கர வாகனத்தை உட்கார்ந்து கொண்டு சீக்கிரமாக வா என்று சொல்லிக் கொண்டிருந்த போது எனது பர்சு என கத்தியதில் தனக்கு தெரிந்த நபர் ஒருவர் அவர்களை பிடித்துக் கொண்டார் தானும் பிடித்துக் கொண்டு ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து மணிபர்சை பிடிங்கிய இரண்டு நபர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று ஷவுகத் அகமத் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து மணி பர்ஸ் பிடிங்கி சென்ற இரண்டு நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.