ஈரோடு: பண்ணாரி, திம்பம், ஆசனூர் வழியாக மைசூர் செல்லும் அனைத்து வாகனங்களும் சக்தியிலிருந்து வடக்கு பேட்டை, டி. ஜி புதூர் நால்ரோடு, கடம்பூர், கேர்மாளம், அரேப்பாளையம், ஆசனூர் வழியாக செல்ல வேண்டும்.
ஈரோடு, கோவை மேட்டுப்பாளையம் மார்க்கம் :-
ஆசனூர், திம்பம், பண்ணாரி வழியாக, கோவை, மேட்டுப்பாளையம், ஈரோடு செல்லும் அனைத்து வகை வாகனங்களும் ஆசனூர், அரேப்பாளையம், கேர்மாளம், கடம்பூர், டி.ஜி புதூர் நால்ரோடு வழியாக மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும். சக்தி போக்குவரத்து காவல்துறை மூலம் நகரின் முக்கிய இடங்களில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.