தேனி : தேனி மாவட்டம் முழுவதும் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு, கிராமப்பகுதியில் உள்ள பொதுமக்களை சந்தித்து அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்லும்போது பொதுமக்கள் தங்களைக்கும்,தங்கள் குடும்பத்தையும், தங்களை சார்ந்தவர்களையும் கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பதை பற்றியும், கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும், கடைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் பண்டிகை பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டுமென்றும் இலவச முகக் கவசங்கள் வழங்கியும் தொடர் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
அதன்படி தேனி காவல் நிலையம், வீரபாண்டி காவல் நிலையம், வருஷநாடு காவல் நிலையம், கம்பம் போக்குவரத்து காவல் நிலையம் சார்பாக தீவிரமாக விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
தேனியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.நல்ல தம்பி