இராணிப்பேட்டை: அரக்கோணத்தின் காவல் ஆய்வாளாராக பணியாற்றியவர் திரு.முத்துராமலிங்கம் அவர்கள். அவர் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பணி மாறுதல் அடைந்துள்ளார். இவர் கடந்த இரண்டு வருடங்களாக அரக்கோணம் காவல் ஆய்வாளராக பணியில் உள்ளார். பொறுப்பேற்ற சிறிது காலத்தில் அப்பகுதி மக்களின் அன்பை பெற்றவர். அதற்கு காரணம், முத்துராமலிங்கம் அவர்கள் வழக்குகளில் விரைந்து செயல்படும் விதம், மற்றும் சமூகத்தின் மீது அவர் காட்டும் அக்கறை. 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ள நாள் முதல் இந்நாள் வரை பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வந்தார். மேலும், கொரானா ஊரடங்கு நாட்களில் பல தன்னார்வலர்கள் வழங்கும் உணவு மற்றும் மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் உரியவரிடம், சென்றடைய வழிவகை செய்து வந்தார். மேலும் சுமார் 400க்கும் மேற்பட்ட தன்னார்வ குழுக்களை அமைத்து கொரானா பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை திறம்பட செய்து வந்தார். இச்செயல் அரக்கோணம் மக்களிடையே மட்டுமல்லாது, காவல்துறையினரிடையே மிகுந்த பாராட்டை பெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பணிமாறுதலில் செல்லும் இவருக்கு, அரக்கோணம் காவல் நிலையத்தில் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு திரு.முத்துராமலிங்கம் அவர்களை கௌரவப்படுத்தி, பிரியா விடை கொடுத்து, வழியனுப்பி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா,மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு திரு. S. பாபு மற்றும் அப்பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டு திரு.முத்துராமலிங்கம் அவரை குறித்தும், காவல்துறையில் இவரின் 2 வருட செயல்படுகள் குறித்தும் பேசினார்கள். இவரின் சிறப்பு மிக்க காவல் பணி காஞ்சிபுரம் மாவட்டத்திலும் தொடர போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்