திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் காவல் சரகம், ஓகைப்பேரையூர், காலணிதெருவை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் தினேஷ் (23/24) என்பவர் (29.11.2024)-ந் தேதி (ALL OUT) கொசு மருந்து சாப்பிட்டு உடல்நிலை சரியில்லை என உள்நோயாளியாக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, நல்ல நிலையில் மருத்துவரின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் தினேஷ்-ன் நண்பர்கள் 1)தமிழ்செல்வன் (25/24). த/பெ. குமார், கீழத்தெரு, கேக்கரை. 2) குமரன் (24/24). த/பெ.சின்னப்பன், கீழத்தெரு, ஓகைபேரையூர். 3) பாலமுருகன் (21/24).த/பெ. பாஸ்கரன், ஓகைபேரையூர். 4) அஜீத்குமார் (29/24). த/பெ. ஜீவானந்தம், ஓகைப்பேரையூர் ஆகியோர் தினேஷ்- ஐ பார்த்துவிட்டு, வார்டிலேயே நின்று ஆபாசமாக பேசிக்கொண்டிருந்தவர்களை , இங்கு சத்தம் போடக்கூடாது வெளியே சென்று பேசுங்கள் என கூறிய பயிற்சி மருத்துவரிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்டு மருத்துவரை தொடர்ந்து சிகிச்சையளிக்கவிடாமல் தடுத்த நால்வரையும் விசாரணை மேற்கொண்டு கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர்.
சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த திருவாரூர் தாலுக்கா காவல் உதவி ஆய்வாளர் திரு.சுரேஷ் மற்றும் காவலர்களை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.(Agri)., அவர்கள் பாராட்டினார்கள்.மேலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அடிதடி, ரெளடிசம் போன்ற குற்றசெயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri).,அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.