தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட ஊர் காவல் படையினருக்கு மாவட்ட கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பணி நியமன ஆணை வழங்கி அறிவுரை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஊர்காவல் படைக்கு 31 ஆண் நபர்கள் 9 பெண் நபர்கள் ஊர்க்காவல் படை வீரர்களாக (Home Guards) தேர்வு செய்யப்படுவதற்கு கடந்த 08.11.2020 தினசரி நாளேடுகளில் விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது.
அதன்படி 24.11.2020 அன்று தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 100 பெண் விண்ணப்பதாரர்கள் உட்பட 695 பேர் ஆஜராகியிருந்தனர். ஆஜரான விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் உயரம், கல்வித்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமயில் நடைபெற்றது.
இதில் தேர்வு பெற்ற 9 பெண் விண்ணப்பதாரர்கள், 31 ஆண் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இன்று (30.11.2020) மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பணி நியமன ஆணை வழங்கி அறிவுரை வழங்கினார்.
தேர்வு செய்யப்பட்டுள்ள ஊர்க்காவல் படையினருக்கு நாளை (01.12.2020) முதல் 45 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கோபி, தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. செல்வன், தூத்துக்குடி ஊர்க்காவல்படை தளவாய் திரு. பாலமுருகன், துணை தளவாய் திருமதி. கௌசல்யா ஆகியோர் உடனிருந்தனர்.