தர்மபுரி: தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2020-ல் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று உடற்தகுதி மற்றும் மருத்துவ ஆய்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மாவட்ட தலைமையக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.அண்ணாமலை மற்றும் சைபர் கிரைம் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.புஷ்பராஜ் ஆகியோர் தேர்ச்சிபெற்றநபர்கள்காவல்பயிற்சியில்சேருவதற்கானபணிநியமன ஆணவழங்கப்பட்டது .
தேர்ச்சி பெற்ற அனைத்து காவலர்களுக்கும் 13ம் தேதிகாலைதங்களுக்குஒதுக்கப்பட்டுள்ள பயிற்சிப் பள்ளியில் அறிக்கை செய்யவும் பின்னர் 14-ஆம் தேதி காலை முதல் அடிப்படை பயிற்சி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் பயிற்சியானது ஏழு மாதகாலம் அடிப்படை பயிற்சியாகவும், ஒரு மாதம் அறிமுக பயிற்சியாகவும் என மொத்தம் எட்டு மாதம் பயிற்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
தர்மபுரியில் இருந்து நமது நிருபர்
க.மோகன்தாஸ்.