சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு பணியிலிருந்த காவல் ஆளிநர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
26.10.2019 அன்று இரவு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோயம்பேடு பேருந்து முனையம், மெரினா காந்திசிலை, சென்ட்ரல் ரயில் நிலையம், தி.நகர் ஆகிய பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு, அங்கு பணியிலிருந்த காவல் ஆளிநர்களுக்கு இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து 27.10.2019 அன்று காலை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள், காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு இனிப்புகளை வழங்கி தீபா80வளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில் காவல் துறை கூடுதல் இயக்குநர் (தலைமையிடம்) திருமதி.சீமாஅகர்வால், கூடுதல் ஆணையாளர்கள் திரு.சி..ஈஸ்வரமூர்த்தி, இ.கா.ப (மத்தியகுற்றப்பிரிவு) திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா, இ.கா.ப, (தெற்கு) இணை ஆணையாளர்கள் திரு.கபில்குமார் சி சரத்கர், இ.கா.ப (வடக்கு), திரு.சுதாகர், இ.கா.ப (கிழக்கு) திருமதி.ஜெயகௌரி, இ.கா.ப (போக்குவரத்து வடக்கு) திரு.ஏ.ஜி.பாபு, இ.கா.ப, (தலைமையிடம்), நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையாளர்கள் திரு.ஆர்.திருநாவுக்கரசு, இ.கா.ப, திரு.எம்.சுதாகர், தலைமையிட துணை ஆணையாளர் திரு.அசோக்குமார், ஆயுதப்படை-2 துணை ஆணையாளர் திரு.ரவிச்சந்திரன், காவல் உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.