காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் தலைமை காவலராக பணியாற்றியவர் திரு.ரஜினிகாந்த். இவர் கடந்த மார்ச் மாதம் நெஞ்சுவலியால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் மூன்று லட்சத்திற்கான காசோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கண்ணன் அவர்கள் வழங்கினார்.