மதுரை: வழிப்பறி வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த, சோழவந்தான் காவல் ஆய்வாளர் திரு.சிவபாலன், கொடுஞ்செயல் குற்றத் தடுப்புப் பிரிவு, சார்பு ஆய்வாளர் திரு.ஆனந்த் மற்றும் காவல் ஆளினர்கள் (14 ) பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
தடை செய்யப்பட்ட குட்கா வழக்கில் குற்றவாளிகளை விரைவாக கைது செய்து, வழக்குப் பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய மேலவளவு சார்பு ஆய்வாளர் திரு.நாகநாதன் மற்றும் காவல் ஆளினர்கள் (7) பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
தடை செய்யப்பட்ட குட்கா வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்து வழக்குப்பதிவு செய்து, நீதிமன்ற காவலில் உட்படுத்திய பெருங்குடி சார்பு ஆய்வாளர் திரு. கார்த்திகேயன் மற்றும் காவல் ஆளினர்கள் (3) பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
திருட்டு மட்டும் கன்னக்களவு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து, அவர்களிடம் கைப்பற்றப்பட்ட நகைகளை மற்றும் களவுபோன பொருட்கள் மீட்கப்பட்டு குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய சீலைமான் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.பிச்சை பாண்டி மற்றும் காவல் ஆளினர்கள் (4) பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
கள்ள நோட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவாக கைது செய்து, நீதிமன்ற காவலுக்குப் உட்படுத்திய சாப்டூர் சார்பு ஆய்வாளர் திருமதி.மணிமொழி மற்றும் காவலர் ஆளினர்கள் (3) பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
செல்போன் வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவாக செயல்பட்டு கையும் களவுமாக பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த, High Way Patrol சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.சித்திரை வடிவேல் மற்றும் காவல் ஆளுனிர்கள் (3) பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி