தூத்துக்குடி : தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த திரு. பிரகாஷ் பாபு அவர்கள் சென்னை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் பாபு அவர்கள் (06.06.2023) மரியாதை நிமித்தமாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மென்மேலும் பல பதவி உயர்வுகள் பெற்று வளமுடன் வாழ வாழ்த்தி நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினார்.