சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (31.03.2023), -ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள திருக்கோஷ்டியூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சேது, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.ஜான்பிரிட்டோ, காரைக்குடி தெற்கு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.முனியாண்டி, சிவகங்கை தாலுகா காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.பெரியகருப்பன், குன்றக்குடி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.ராமசுப்பிரமணியன், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.ரெத்தினம், சிவகங்கை காவல் கட்டுப்பாட்டு அறை சார்பு ஆய்வாளர் திரு.மாசிலாமணி ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ் அவர்கள் பணிபாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி