திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குரும்பபட்டியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவலையடுத்து தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு.மாரிமுத்து அவர்கள் தலைமையில் காவலர்கள் ரோந்து சென்றபோது அங்கு பணம் வைத்து சூதாடிய சதீஷ்குமார் (40), முருகன் (48), விசுவாசம் (56), கருப்பையா (24), பாண்டீஸ்வரன் (31), இப்ராகிம் (40) ஆகியோரை பிடித்து தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.அருண் நாராயணன் அவர்கள் மேற்கண்ட ஆறு நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து பணம் ரூ.80,170 பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா