கோவை: மேட்டுப்பாளையம் கிளப் என்ற பெயரில் பொழுதுபோக்கு சங்கம் செயல்பட்டு வந்தது.இங்கு பணம் வைத்து சீட்டாடு வதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு நேற்று இரவு தகவல் வந்தது.
இன்ஸ்பெக்டர் திரு.சண்முகம் நேற்று இரவு போலீசாருடன் அங்கு சென்று அந்த தோட்டத்தை சுற்றி வளைத்தார். அப்போது அங்குள்ள பண்ணை வீட்டில் பணம் வைத்து சூதாடிய தாக அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் ,சதீஷ், ராஜ்குமார், சிவக்குமார், ரஜினிகாந்த்
,வேலுமணி , ராஜன் |சுரேந்திர குமார், சிவலிங்கம் ,தேவராஜ்,பால சுப்ரமணியன்,சந்திரசேகர், சரவணன் ஆகியோர்கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து சூதாட பயன்படுத்தப்பட்ட ரூ 40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது..