திருவாரூர் : நீடாமங்கலம், நகர், கீழத்தெரு அரசமரத்தடி அருகில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட – நீடாமங்கலம், நகர், மேலதெருவை சேர்ந்த தங்கையன் மகன் பாலகிருஷ்ணன், நீடாமங்கலம், நகர், நடுத்தெரு கோபால் மகன் கருணாநிதி, நீடாமங்கலம், நகர், நடுத்தெரு சண்முகம் மகன் பிரேம் மற்றும் நீடாமங்கலம், நகர், நடுத்தெரு நாகமுத்து மகன் ரமேஷ் ஆகிய நான்கு நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து, சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம், இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.S.ஜெயக்குமார், M.Sc., (Agri)* அவர்கள் எச்சரித்துள்ளார்கள். சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த நீடாமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.பாலமுருகன் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினர்கள்.