கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே திருப்பத்தூர் மாவட்டம், புலியனேரி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (47). ஆட்டு வியாபாரியான இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் பல வாரசந்தை மற்றும் இறைச்சி கடைகளில் ஆடுகளை சில்லறை விலைக்கு விற்பனை செய்து வருகிறார். நேற்று காவேரிப்பட்டிணம் பகுதிகளில் ஆடுகளை விற்ற சுமார் 25 லட்ச ரூபாயை வசூல் செய்தும், அங்கிருந்து ஓசூர் பத்தலப்பள்ளி என்ற இடத்திற்கு வந்த அவர், பத்தலப்பள்ளியில் ஆடுகளை விற்றவர்களிடம் பணத்தை வசூலிப்பதற்காக நடந்து சென்றார். காரில் வந்த 4 பேர் சரவணனை மடக்கி பிடித்து, தங்களை போலீசார் கஞ்சா விற்பனை செய்கிறாயா காரில் ஏற்றி கடத்தி சென்று. சரவணன் வைத்திருந்த பையில் இருந்த ரூ. 25 லட்ச ரொக்க பணத்தை பறித்து கொண்ட அந்த கும்பல் அவரை உத்தனப்பள்ளி அருகே உள்ள அகரம் என்ற பகுதியில் இறக்கி விட்டு அவர்கள், காரில் தப்பி சென்றனர். இது குறித்து புகாரின் பேரில் ஓசூர் அட்கோ போலீசார் விசாரைண நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்