சென்னை: புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த லலிதா, (வ/48), என்பவர் கடந்த 04.06.2021 அன்று மதியம் அம்மணியம்மன் தோட்டம் 4 வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு சில நபர்கள் லலிதாவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் ரூ.230/-ஐ பறித்துக்கொண்டு தப்பி விட்டனர்.
இது குறித்து லலிதா H5 புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
H5 புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று, விசாரணை செய்து மேற்படி லலிதாவிடம் வழிப்பறி செய்த 1.அப்பு (எ) சசிகுமார், (வ/20), தண்டையார்பேட்டை மற்றும் 2.பரத், (வ/23) ஆகிய 2 நபர்களை கடந்த 05.06.2021 அன்று கைது செய்தனர். மேலும் வழிப்பறியில் ஈடுபட்ட மற்ற 3 குற்றவாளிகளையும் காவல் குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு, விசாரணை செய்து, 1.சுபாஷ், (வ/21), புதுவண்ணாரப்பேட்டை, 2.தினேஷ், (வ/23), தண்டையார்பேட்டை 3.விக்னேஷ், (வ/23), தண்டையார்பேட்டை ஆகிய 3 நபர்களை 19.06.2021 இன்று கைது செய்து, அவர்களிடமிருந்து 1 கத்தி கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்கள்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.