கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் பாகலூர் ரோட்டில் அர்சியா என்பவர் குடியிருந்து கொண்டு பாகலூர் ரோட்டில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் எதிரே உள்ள பிஸ்மி சிக்கன் கடையை நடத்தி வருவதாகவும் சிக்கன் கடையில் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த முபாரக் என்பவர் வேலை செய்து வந்ததாகவும் (14.11.2023) ஆம் தேதி வியாபாரமான ₹63,000/ – ரூபாய் பணத்தை கடையில் வைத்து இரவு சுமார் 9.30 மணிக்கு பூட்டிவிட்டு மறுநாள் (15.11.2023) ஆம் தேதி காலை 06.40 மணிக்கு கடையை திறந்து பார்த்த போது பணம் வைத்திருந்த கல்லாவை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளதாக தெரிந்து சிசிடிவியை பார்த்தபோது கடையில் வேலை செய்த முபாரக் பணத்தை திருடி சென்றதாக தெரிந்து அர்சியா (17.11.2023) ஆம் தேதி அட்கோ காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து கடையில் பணம் திருடிய நபரை கைது செய்து அவரிடமிருந்து ₹61,210/- பணத்தை பறிமுதல் செய்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்