கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி காவல் நிலைய பகுதியில் ராஜ்குமார் என்பவர் லாலிக்கல் கிராமத்தில் டாட்டா கம்பெனியில் வேலை செய்து புதிதாக கட்டி வரும் URG நிறுவன தங்குமிடத்தில் குடியிருந்து வருவதாகவும் 27.03.2024 ஆம் தேதி இரவு சுமார் 22.00 மணிக்கு ரூமில் நண்பருடைய செல்போனும் தன்னுடைய செல்போனும் மணி பர்சு ஆகியவற்றை ஜன்னல் ஓரத்தில் வைத்துவிட்டு தூங்கிவிட்டு 28.03.2024 ஆம் தேதி காலை சுமார் 06.00 மணிக்கு எழுந்து பார்த்தபோது இருவருடைய செல்போனும், மணிபர்சில் இருந்த பணம் ₹2,000/- காணவில்லை என தேடி பார்த்து யாரோ திருடி சென்றுவிட்டதாக உத்தனப்பள்ளி காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரணை செய்த போலீசார் பணம்,செல்போன் திருடி சென்ற ஐந்து நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து பணம்,செல்போன் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.