திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா பெத்தநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சடையப்பன்.இவரிடம் கடந்த 27.10.2021அன்று மர்ம நபர் ஒருவர் வங்கி மேலாளர் என கூறி வங்கிக் கணக்கை புதுப்பிக்க வேண்டுமென வங்கிக்கணக்கு விபரம் மற்றும் OTP எண்களை பெற்று சடையப்பன் வங்கிக் கணக்கிலிருந்து இணையதளம் மூலம் பணம் ரூபாய் 64411/- எடுக்கப்பட்டது. இதனை அறிந்த சடையப்பன் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.சீனிவாசன் அவர்களின் உத்தரவின்படி சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் புகார்தாரரான வங்கிக் கணக்கை பயன்படுத்தி இணைய தளம் வழியாக செல்போன் வாங்க பதிவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து சைபர் கிரைம் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டனர்.
மேலும் மீட்ட பணம் ரூபாய் 64411/-ஐ இன்று (10.11.2021 ) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் புகார்தாரரான சடையப்பனிடம் வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா