திருச்சி: கடந்த (15.02.25)-ந்தேதி காந்திமார்க்கெட் குற்றப்பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி மார்க்கெட் ஆர்ச் அருகில் டீ கடையில் நின்ற ஒருவரிடம் ரூ.50,000/- பணத்துடன் இருந்த கைப்பையை திருடிச்சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குபதிவு செய்து வழக்கின் குற்றவாளிகளான கிராப்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் வயது (40/25). த.பெ.செல்வம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம், அவிச்சப்பட்டி நத்தம் பகுதியை சேர்ந்த பழனிக்குமார் வயது (34/25). த.பெ.சந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கின் புலன் விசாரணை விரைந்து முடிக்கப்பட்டு, கடந்த (02.03.2025)-ந்தேதி மேற்படி குற்றவாளிகள் முத்துக்குமார் மற்றும் பழனிக்குமார் ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கையை புலன் விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள். (02.09.25)-ந்தேதி மேற்படி வழக்கில் மாண்பமை குற்றவியல் நீதித்துறை நடுவர் -V, அவர்களால் பணம் திருடிய குற்றத்திற்காக பா.நி.ச பிரிவு 303(2)-ன்படி குற்றவாளிகள் இருவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.1000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, நீதிமன்ற விசாரணைக்கு சாட்சிகளை குறித்த காலத்தில் ஆஜர்படுத்தியும், இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.