இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள குமரக்குடி நெசவாளர் காலணியைச் சேர்ந்த இளைஞர்கள் சூரியபிரகாஷ் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும் சாலையின் ஓரமாக கிடந்த கைப்பையை எடுத்துள்ளனனர்.
அப்பையில் பணம் ரூபாய் 50 ஆயிரம் மற்றும் அலைபேசி ஒன்று இருந்ததால் உடனடியாக அருகிலிருந்த பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காவல்துறையினர் விசாரணை செய்ததில் பரமக்குடியைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவர் உறவினர் வீட்டு விசேசத்திற்கு செல்லும் வழியில் தனது கைப்பையை தவறவிட்டது தெரியவந்தது.
இந்நிலையில் காவல் நிலையத்தில் பணத்தை ஒப்படைத்த இளைஞர்கள் முன்னிலையில் பரமக்குடி நகர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பணம் மற்றும் அலைபேசியை உரிய நபர்களிடம் ஒப்படைத்தார்கள்.
கீழே கிடந்த பணத்தை உரிய நபர்களிடம் ஒப்படைத்த இளைஞர்களின் இந்த நற்செயலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்.IPS., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.