சென்னை : சென்னை, சேத்துப்பட்டையை சேர்ந்த ரமேஷ் (60) என்பவர் Bank of Baroda வங்கியின் டெபிட் கார்டு வைத்துள்ளார். கடந்த 18.10.2020 அன்று ரமேஷின் டெபிட் கார்டிலிருந்து பணம் ரூ.52,000/-, இணையதளம் மூலம் பணபரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது.
ரமேஷ் இது குறித்து, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்த சைபர் கிரைம் பிரிவின் கீழ்பாக்கம் பிரிவில் உடனடியாக புகார் கொடுத்ததின் பேரில், விசாரணை மேற்கொண்டதில் அடையாளம் தெரியாத நபர் புகார்தாரரின் டெபிட் கார்டிலிருந்து ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை மோசடி செய்துள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து Bank of Baroda வங்கிக்கு சைபர் கிரைம் காவல் குழுவினர் புகார்தாரர் ரமேஷின் பணத்தை உரிய வழிபாட்டுதலின் படி கொடுக்கும்படி கடிதம் அனுப்பினர். வங்கி நிர்வாகத்தினர், ரமேஷ் வங்கி கணக்கிற்கு ரூ.52,000/-ஐ உடனடியாக திருப்பி செலுத்தினர். இதனால் மகிழ்ச்சியடைந்த ரமேஷ் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் கீழ்பாக்கம் சைபர் கிரைம் காவல் குழுவினருக்கு நன்றி தெரிவித்தார். இதுவரை கீழ்பாக்கம் காவல் மாவட்டம் சைபர் கிரைம் பிரிவில் ஆன்லைனில் பணத்தை இழந்த 10 நபர்களுக்கு பணம் ரூ.2,39,841/- திரும்ப பெற்று தந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர் அப்துல் ஹாபிஸ்
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர் அப்துல் ஹாபிஸ்