தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சொக்கன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த பரமேஷ் என்பவர் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் கடத்தி சென்று மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்துடன் சேலத்தை சேர்ந்த ரத்தினவேல், சக்தி மகேந்திரன், மணிகண்டன், விக்னேஷ், தட்சிணாமூர்த்தி ஆகியோர் காரில் கடத்திச் சென்றனர். இந்நிலையில் பரமேஷ் அவர்களிடமிருந்து தப்பி வந்து மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் நடந்த சம்பவங்களை பற்றி கூறி தகவல் தெரிவித்த நிலையில் காவல் ஆய்வாளர் திரு.விசுவநாதன் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைத்து கடத்தல் கும்பலை சேர்ந்த 5 பேரையும் பிடித்து கடத்தல், பணம் பறித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களை பாலகோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.