சென்னை: 26/02/22ந் தேதி இரவு 9.30 மணியளவில் நான் பணியில் பட்டினப்பாக்கம் காவல் நிலைய சரகத்தில் பணியில் இருந்தபோது பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் திரு.சரவணன் முக்கில் ரத்தம் வடிந்து கொண்டு வந்தார். நான் அவரிடம் யாராவது அடித்துவிட்டார்களா? எங்கையாவது கிழே விழுந்துவிட்டாயா என்று கேட்டப்போது இல்லை நான் சாப்பிட்டுக்கொண்டுருந்த போது தானாகவே மூக்கில் இருந்து இரத்தம் வந்தது| சரியாகிவிடும் என்று நினைத்தேன் ஆனால் சரியாகவில்லை அதே போல்தனக்கு ஏற்கனவே மூக்கில் இருந்து இரத்தம் வந்ததாகவும், அதை நான் யாரிடமும் கூறவில்லையென்றும் தற்போது அதிகமாக இரத்தம் வந்தால் உயிர் போய் விடுமோ என்று பயம் ஏற்பட்டது.
உடனே அம்மா ஞாபகம் வந்து என்னை எப்படி காப்பாற்றி விடுவிங்க என்று நினைத்து நீங்க இருங்கும் இடத்துக்கு தேடி வந்தேன் என்று கூறினர். தனக்கு சுகர் மற்றும் இரத்தம் அழுத்தம் அதிகம் இருப்பதாக தெரிவித்து மயங்கி விழந்தார். நான் உடனே என் வாகனத்தில் இருந்த துண்டை எடுத்து இரத்தத்தை துடைத்தேன். 108 வாகனம் வர தாமதம் ஆகும் என்பதால் உடனே என் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மைலாப்பூரில் உள்ள BSS மந்துவமனையில் சிகிச்சை எடுத்துச் சென்றேன்.
மருத்துவர் சிகிச்சை அளித்தார் இரத்தம் வருவது நிற்கவில்லை அங்கிருந்து ENT மருத்துவமனை, அபிராமபுரம் கொண்டுசெல்லப்பட்டது. உடனே மருத்துவர் சிகிச்சை அளித்தார் அவருக்கு உயர் அழுத்த இரத்த கொதிப்பு இருப்பதால் இரத்தம் வருகிறதுசிறிது நேரம் தாமதமாக வந்திருந்தால் முலைக்கு போகும் ரத்த நரம்பு வெடித்து உயிர்சேதம் ஏற்பட்டு இருக்கும் என்று தெரிவித்து உடனே சிகிச்சை அளித்து admit செய்தார் இரவு சுமார் 01.00 மணி வரை அவர் உடன் இருந்து மருத்துவர்தீவிர சிகிச்சை அளித்த பின் உடல நலம் முன்னேற்றம் ஏற்பட்டது. காவலர்கள் அனைவரும் உடன் இருந்து கவனித்துக்கொண்டனர்
காவலர் சரவணன் தனிமையில் வாழ்ந்துவருகிறார். உடன் யாரும் இருந்து கவனிக்க யாரும் இல்லை என்பதால் மறுநாள் மருத்துவமனைக்கு சென்று மருத்துவ Bill கட்ட 50.000|-எடுத்துச் சென்றேன்.
காவலர் Discharg, SUmmary மற்றும் Bill receipt யை எடுத்து வரும்படி கூறினேன். காவலர் பூபதி நான்காவவதுமாடியில் இருந்து கீழ் தளத்தில் Bill கட்டும் இடத்திற்கு வந்து பணம் கட்டும் ரசிது கொடுத்தார்…
Billயை பார்த்ததும் அதிர்ந்து போனேன்………
அவற்றில் நோயளி பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.
என்னை நோக்கி டாக்டர் திரு. மோகன காமேஸ்வரன் அவர்களடைய துணைவியார் வந்தார். பார்பதற்கு அம்மன் போன்று சிரித்த முகத்துடன் மகாலட்சுமி போன்று காட்சி அளித்தார்.
அம்மா Bill எவ்வளவு கட்டவேண்டும் என்றேன்.
என்னை கட்டி அனைத்துக்கொண்டு காவல்துறை செய்யும் தொண்டிற்கு ஈடு இணையில்லை. நீங்கள் பணம் எதுவும் கொடுக்க வேண்டாம் என்று கூறி பணம் வாங்க மறுத்துவிட்டார்.
டாக்டரிடம் நான் தாங்கள் எவை காவலர் உயிரை காப்பாற்றினீர்கள் மேலும் பணம் வாங்க மறுக்கின்றீர்களே என்று கூறியபோது , இரவு நேரம் பணிமுடிந்து வீட்டுக்கு போகும் நேரத்தில் தன்னிடம் பணிபுரியும் காவலர் உயிருக்கு போராடும்போது அப்படியேவிட்டு விட்டு போகாமல் மேலும் 108 வாகனம் வரும்வரை காத்திருக்காமல் அவரை சரியான நேரத்தில் உங்கள் வாகனத்தில் மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்து கூடவே நீங்கள் உங்கள் காவலர்களுடன் உடன் இருந்து அவரை கவனித்துக்கொண்டது மெய்சிலிர்க்க வைக்கிறது.
மேலும் எங்களுக்காக காவல்துறையினர் இரவு பகலும் பாடுபடுகிறீர்கள் எங்களால் முடிந்த சிறிய சேவை என்று கூறினார் மனித நேயத்தை அவரிடம் கண்டேன். வாழ்க மனிதநேயம்
ஏற்கனேவே நாம் மருத்துவரை கடவுளாக நினைக்கின்றேன். கடவுளே நேரில் வந்தது போன்று இருந்தது.
வாழ்க பல்லாண்டு, பல உயிர்களை காக்கின்ற தெய்வமே .
இறைவன் அருள் மேலும் மேலும் உங்களுடன் இருந்த அனைத்து செயல்களும் வெற்றி கிட்டடும் நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் ஆண்டவர் ஆசிர்வதித்து வழிநடத்துவார்.