கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் தெற்கு வட்ட அலுவலகத்தில் நில அளவை மற்றும் பதிவேடு துறையில் பணிபுரியும் சுரேஷ்குமார் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த (05.01.2024) அன்று தனது மற்றும் தனது அலுவலகத்தில் உடன் பணிபுரியும் முதுநிலை வரைவாளரின் (நில அளவை மற்றும் பதிவேடுகள்) பட்டா மாறுதலுக்கான பயனாளர் ஐடி மற்றும் password தனது அனுமதியில்லாமல் எடுத்து அதனை தாங்கள் பயன்படுத்துவது போல் பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றம் செய்யும் நோக்கத்தில் பட்டா மாறுதலுக்காக APPROVAL செய்தும் தொடர்ந்து அடுத்த கட்டதிற்கு பரிந்துரை செய்யப்பட்டு பின்னர் பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிய வந்ததாகவும் மேற்படி அலுவலகத்தில் தங்களுடைய பயனாளர் ஐடி (login id) மற்றும் Password ஆகியவற்றை பயன்படுத்தி பட்டா மாறுதலுக்கான பரிந்துரை வழங்கிய நபர்களை கண்டுபிடித்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டி கோவை மாநகர சைபர் கிரைம் ஆய்வாளர் அருண் அவர்களிடம் கொடுத்த புகாரின் பெயரில் போலீசார் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்