சென்னை: கண்ணகி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரண்டு அடுக்கு மாடி குடியிருப்பில் கடந்த 6.6.2021 அன்று இரவு சில இளைஞர்கள் ஒன்று கூடி சுனில் என்பவரின் பிறந்த நாளை கொண்டாடிய போது, பட்டா கத்தியால் கேக் வெட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது.
இது குறித்து அதே பகுதியைச்சேர்ந்த யாகேஷ்வரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து J11 கண்ணகி நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்து மேற்படி சம்பவத்தில் தொடர்புடைய 1.சுனில், வ/18, த/பெ.அன்பழகன், எண்.9150, இரண்டு அடுக்கு மாடி குடியிருப்பு,
கண்ணகி நகர் 2.நவீன்குமார் (எ) தொப்பை, வ/20, த/பெ.குமார், எண்.4710, இரண்டு அடுக்கு மாடி குடியிருப்பு, கண்ணகி நகர் 3.அப்பு, வ/29, த/பெ.சசிகுமார், எண்.14492, இரண்டு அடுக்கு மாடி குடியிருப்பு, கண்ணகி நகர் 4.தினேஷ், வ/18, த/பெ.முருகன், எண்.8913, இரண்டு அடுக்கு மாடி குடியிருப்பு, கண்ணகி நகர் 5.ராஜேஷ், வ/19, த/பெ.நடராஜ், 2 அடுக்குமாடி குடியிருப்பு, கண்ணகி நகர் 6.கார்த்திக் (எ) பீடி, வ/30, த/பெ.குமார், எண்.4710, 2 அடுக்குமாடி குடியிருப்பு, கண்ணகி நகர் ஆகிய 6 நபர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். குற்றவாளிகளிடமிருந்து 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 6 நபர்களும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.