திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர்
ஜெயந்தி(32) நேற்று மதியம் பட்டாபிராம் இந்தியன் வங்கியில் தனது செயினை அடகு வைத்து, நகை கடன் பெற வந்துள்ளார். வங்கியில் தனது செயினை வைத்து 85,000 ரொக்கம் பெற்று வந்து அதை தனது மொபைட் சீட்டுக்கு அடியில் வைத்துளார்.
இதனை மர்ம நபர் ஒருவர் நோட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஜெயந்தி பட்டாபிராம் சாலையில் உள்ள கண் கண்ணாடி விற்பனையகத்திற்கு வந்து தான் ஏற்கனவே ஆர்டர் கொடுத்து வைத்திருந்த மூக்கு கண்ணாடியை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு வந்து வாகனத்தில் இருந்த பணத்தை எடுக்க சீட்டை திறந்து பார்த்தபோது வண்டியில் வைத்திருந்த 85,000 ரூபாய் பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.பின்னர் ஜெயந்தி பட்டாபிராம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளர் முருகானந்தம் அவர்களிடம் புகார் அளித்துள்ளார்.
இதனடிப்படையில் அப்பகுதியில் அரசு அமைத்துள்ளது சிசிடிவி காட்சிகளும் தனியார் வடிவங்களில் உள்ள சிசிடிவி காட்சிகள் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் மர்ம நபர் ஒருவர் வாகனத்தின் சீட்டிற்கு அடியில் இருந்த பணத்தை எடுத்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.இது குறித்து வழங்கு பதிவு செய்துள்ள பட்டாபிராம் காவல்துறை 85000 பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.ஆள் நடமாட்டம் அதிகமுள்ள சாலையில் பட்டப்பகலில் பணம் திருடப்பட்ட சம்பவம் பட்டாபிராம் பகுதியில் பெரும் அதிர்ச்சி பொதுமக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஏழுமலை